ETV Bharat / bharat

One Side Love: சிறுமியின் நடுநெற்றியில் பொட்டு வைத்த டீன்ஏஜ் சிறுவன் கைது... - போக்சோவில் கைது

உத்தரப்பிரதேசத்தில் கத்தி முனையில் சிறுமியை வழிமறித்து, நடுநெற்றியில் சிவப்பு நிற வர்ணத்தை பூசிய 13 வயது சிறுவனை பிடித்து போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

One Side Love
One Side Love
author img

By

Published : Jan 9, 2023, 10:57 PM IST

Updated : Jan 10, 2023, 7:10 PM IST

உத்தரப்பிரதேசம்: மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, சிறுமியை கத்தி முனையில் வழிமறித்த சிறுவன், அவளது நடு நெற்றியில் திருமணமான பெண்களை குறிக்கும் விதமாக சிவப்பு நிற வர்ணத்தை பூசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்தப் புகாரில், சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், ஆரம்பக் கட்டத்தில் சிறுவனும், சிறுமியும் ஒரே பள்ளியில் படித்து வந்ததாகவும், தகாத முறையில் சிறுவன் ஈடுபட்டதால் மகளை வேறு பள்ளியில் சேர்த்ததாகவும் தெரிவித்தனர். மேலும் ஊர் கட்டுப்பாடு காரணமாக சிறுவன் குறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருந்து வந்ததகாகவும், தற்போது எல்லை மீறிய செயலை அடுத்து புகார் அளித்ததாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: UP Rape: பெண்ணை கட்டிப்போட்டு தீ வைத்த கொடூரம்!

Last Updated : Jan 10, 2023, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.