ETV Bharat / bharat

17 வயது சிறுமியை கடத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்த இளைஞர் கைது!

மகாராஷ்டிரா: 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கொலை முயற்சியில் ஈடுபட்டதோடு, கடத்தலை வீடியோ பதிவு செய்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Teenager abducts his minor lover, posts video on social media

author img

By

Published : Jul 5, 2021, 12:10 PM IST

Updated : Jul 5, 2021, 1:02 PM IST

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் தனது காதலியான 17 வயது சிறுமியை தன் நண்பர் உதவியுடன் கடத்திச் சென்றதோடு, கடத்தல் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டு பழக்கம்

சமீர் கான் எனும் இந்த இளைஞருக்கு 17 வயது சிறுமியுடன் இருவரின் பொதுவான நபர் ஒருவரின் மூலம் 2019ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், டிக் டொக் உள்ளிட்ட செயலிகளில் இருவரும் தொடர்ந்து தங்களது வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமிக்கு வேறொரு இளைஞருடன் உறவு இருப்பதாக சமீர் கானுக்கு சந்தேகம் எழவே, இருவருக்கும் இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

நண்பர் உதவியுடன் கடத்தி வீடியோ பதிவு

தொடர்ந்து, கடந்த ஜூன் 18ஆம் தேதி, தங்களது பொது நண்பரான ஷாகின் மொஹமட் சித்திகி (25) உதவியுடன் சிறுமியை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருமாறு கட்டாயப்படுத்தி சமீர் கான் அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும், இந்தக் கடத்தல் நிகழ்வை வீடியோ பதிவு செய்து சமீர் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து சிறுமியை வீடா பாட்டி எனும் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை துன்புறுத்திய சமீர் கான், அவருக்கு பாலியல் தொல்லையும் அளித்துள்ளார்.

மேலும், ஆத்திரம் அடங்காமல் சிறுமியை அந்நபர் கொலை செய்ய முயற்சித்த நிலையில், சிறுமி அவரிடமிருந்து தப்பி ஓடியுள்ளார்.

விரைந்து செயல்பட்ட குற்றப்பிரிவு காவல் துறை

சமீர் கான் வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களில் உள்ளூர்வாசிகள் காவல் துறையினருக்கு ட்விட்டர் வழியாக தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட குற்றப்பிரிவு காவல் அலுவலர்கள், சமீர் கான், சித்திகி இருவரையும் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்நிலையில் சமீர் கான் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவருடன் உடல் உறவு கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமீர் கான் மீது போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற போலீஸை சுற்றிவளைத்த கும்பல்!

Last Updated : Jul 5, 2021, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.