ETV Bharat / bharat

சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 11, 2023, 10:56 PM IST

சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோயில்
சிருங்கேரி ஸ்ரீமலஹானிகரேஸ்வரர் கோயில்

அமராவதி: கர்நாடக மாநிலத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதாபீடத்தில் உள்ள ஸ்ரீமலாஹனிகரேஷ்வர் கோயிலின் மிக உயரமான ராஜகோபுரம் கட்டப்பட்டு நாளை (பிப்.12) கும்பாபிஷேகம் மற்றும் அடுத்த மகாசிவராத்திரி மஹோத்ஸவம் நடக்கிறது.

பாரதிதீர்த்த மஹாஸ்வாமியும், விதுசேகர பாரதி மகாசுவாமியும் இவற்றை நடத்துகின்றனர். அதிருத்ர மகாயாகம், சதுர்வேதங்கள், அஷ்டாதச புராண பாராயணம், ஜப ஹோமம் ஆகியவை நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். நாளை மலஹனிகரேஸ்வரர் சந்நிதியில் ஸ்தம்ப கணபதிக்கு கும்பாபிஷேகமும், சஹஸ்ர கலசாபிஷேகமும் நடக்கிறது. அதன்பின், சுவாமிக்கும், பவனி அம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா பூஜை, மகா நீராஜனம் நடக்கிறது.

பின்னர், விமான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. வரும் 15ஆம் தேதி சுவாமி மகரதோட்சமும், துவஜாரோஹணமும் நடக்கிறது. இம்மாதம் 18ஆம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் முன்னிலையில் சதருத்ராபிஷேகம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ பவானி மலாஹனிகரேஸ்வரர் சந்நிதியில் மகாபூஜை, குருநிவாசத்தில் உள்ள சந்திரமௌலீஸ்வரசுவாமிக்கு இரவு முழுவதும் சாதுரியம பூஜை நடக்கிறது. மேலும், வருகிற 20ஆம் தேதி லட்ச மல்லிகார்ச்சனை, மகாநீராஜனம், ரதாரோஹணம், மகரதோத்ஸவம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 21ஆம் தேதி அவப்ரித சங்கமம், அதிருத்ர மஹாயான பூர்ணாஹுதி, மாலை சந்தானோத்ஸவம், தெப்போத்ஸவம், கொடியேற்றம் நடக்கிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 6 வருடங்களுக்கு பிறகு மகா நவசண்டி ஹோமம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.