ETV Bharat / bharat

உத்தவ் தாக்கரே இந்துத்துவா கொள்கையிலிருந்து தவறிவிட்டார் - ஏக்நாத் ஷிண்டே ஆளுநருக்கு கடிதம்

'சட்டப்பேரவைக்குழுத்தலைவராக ஏக்நாத் ஷிண்டே தொடர்கிறார், தலைமைக் கொறடாவாகத் தேர்வு செய்யப்பட்டிருந்த சுனில் பிரபுவை நீக்கி, பாரத் கோகவாலே என்பவர் தலைமைக் கொறடாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்' என ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே ஹிந்துதுவா கொள்கையிலிருந்து தவறிவிட்டார்- ஏக்நாத் ஷிண்டே ஆளுநகருக்கு  கடிதம்

author img

By

Published : Jun 22, 2022, 10:23 PM IST

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது நிலவி வரும் பதற்றமான அரசியல் சூழலில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகாராஷ்டிர ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், 'சட்டப்பேரவைக்குழுத் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தொடர்கிறார். தலைமைக் கொறடாவாகத் தேர்வு செய்யப்பட்டிருந்த சுனில் பிரபுவை நீக்கி பாரத் கோகவாலே என்பவர் தலைமைக் கொறடாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட சட்டப்பேரவை கட்சிக் கூட்டத்தில் 4 சுயேச்சைகள் உட்பட குறைந்தது 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக' அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'இந்துத்துவாவின் பாதையில் செல்வதாக சத்தியம் செய்து என்சிபி மற்றும் காங்கிரஸுடன் எதிரெதிர் சித்தாந்தங்களுடன் இணைந்து இந்துத்துவா கொள்கையிலிருந்து உத்தவே தாக்கரே வழிதவறிவிட்டார்.

முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் கேபினட் அமைச்சர் நவாப் மாலிக் ஆகியோரின் ஊழல் குறித்து தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்’ என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதமானது மகாராஷ்டிர ஆளுநர், சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மஹாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் - அசாம் பறந்த 41 எம்எல்ஏக்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.