ETV Bharat / bharat

இந்து- இஸ்லாமியர்களை விடுதலை போரில் இணைத்த டெல்லி ஜாமியா பள்ளிவாசல்!

author img

By

Published : Jan 30, 2022, 6:37 AM IST

வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் காலப்போக்கில் பெரிதும் கவனிக்கப்படவில்லை. இது ஒருகாலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலை போரில் ஈடுபட்ட பல தியாகிகளுக்கு புகழிடமாக விளங்கியது. இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் பின்னி பிணைந்தது.

jammi
jammi

ஹைதராபாத் : தேசிய தலைநகர் டெல்லியில் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் அமைந்துள்ளது. நுணுக்கமான கலை நுட்பத்துடன், அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள இந்தப் பள்ளிவாசல் வளமான இஸ்லாமிய கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த சான்றாகும். வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பள்ளிவாசல் காலப்போக்கில் பெரிதும் கவனிக்கப்படவில்லை.

இது ஒருகாலத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலை போரில் பல போராட்ட வீரர்களுக்கு புகழிடமாக விளங்கியது. இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் பின்னி பிணைந்தது. இந்தப் பள்ளிவாசலில் 1662ஆம் ஆண்டுக்கு பிறகு பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வரலாற்று ஆய்வாளரான ராணா சஃப்வி நம்மிடம் கூறுகையில், “1857 காலக் கட்டம்.. ஆங்கிலேயருக்கு எதிராக சிப்பாய் கலகம் வெடித்த நேரம் அது. அப்போது, நமது வீரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலைப் போரில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலும் வீரர்கள் இங்கு தங்கியுள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும்பாலான போராட்டங்களும் இங்குதான் நடைபெற்றன.

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை

இதையறிந்த ஆங்கிலேய அரசு இந்த மசூதியை கைப்பற்றியது. தொழுகையில் ஈடுபட தடை விதித்தது. காலப்போக்கில் 1962ஆம் ஆண்டுக்கு பிறகு, இங்கு நமாஸ் செய்ய பள்ளிவாசல் திறக்கப்பட்டது” என்றார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரில் மட்டுமல்ல, 1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போதும் இந்தப் பள்ளிவாசல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

இந்து- இஸ்லாமியர்களை விடுதலை போரில் இணைத்த டெல்லி ஜாமியா பள்ளிவாசல்!

பாகிஸ்தான் என்னும் நாடு உதயமான போது அங்கு செல்லலாமா? வேண்டாமா எனப் பல இஸ்லாமியர்கள் இங்குதான் முக்கிய முடிவுகளை எடுத்தனர். இந்த அரசியல் இக்கட்டான நிலையில் ஜாமியா பள்ளிவாசலில் நிகழ்ந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் உரை அழியாத புகழ் பெற்றது. ஆம்.. “நாங்கள் இஸ்லாமியர்கள்தான். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவை விட சிறந்த ஒரு நாடு இருக்க முடியாது. எங்களுக்கு முஸ்லீம் லீக் தேவையில்லை. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்தியாவோடு பயணிப்போம்” என்றார்.

அபுல் கலாம் ஆசாத் உரை

அபுல் கலாம் ஆசாத் உரையை நினைவுக் கூர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராணா சஃப்வி, “1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் வரலாற்று சிறப்புமிக்க உரையை இங்கு நிகழ்த்தினார். இந்த உரையின்போது ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை அபுல் கலாம் ஆசாத் நினைவுக் கூர்ந்தார்.

மேலும் ஏக இறைவன் அல்லா இந்த உலகையை பள்ளிவாசலாக மாற்றியுள்ளான். ஆகவே இஸ்லாமியர்கள் இங்கிருந்து வேறு இடத்துக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தினார்” என்றார்.

மற்றொரு வரலாற்று சிறப்பு

இந்த ஜாமியா மசூதியில் மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வும் நடந்துள்ளது. பண்டிட் ஷ்ரதானந்த் சரஸ்வதி இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்காக இங்கு நற்செய்தி ஒன்றை வழங்கியுள்ளார். காவி உடை அணிந்து அவர் இந்து-இஸ்லாமிய சகோதரத்துவ நல்லுறவுக்காக அவர் அளித்த நற்செய்தி நினைவுகள் இன்றளவும் இப் பள்ளிவாசலில் காணலாம்.

இந்த பெருமைமிகு வரலாற்றை சுட்டிக் காட்டிய ராணா சஃப்வி, “ஜாமியா பள்ளிவாசலின் படிக்கட்டில் காவி உடை அணிந்து சுவாமி ஷ்ரனாந்தா சரஸ்வதி நின்றிருந்தார். அப்போது அவர் இந்து இஸ்லாமியர் ஒற்றுமைக்காக பிரார்தித்தார். தொடர்ந்து நற்செய்தி ஒன்றையும் வழங்கினார். அந்நேரம் அங்கிருந்த மக்கள் இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்கான முழக்கங்களை எழுப்பினார்கள். மேலும் அந்தப் பண்டிட் வேத மந்திரங்களை அங்கே ஓதினார். இதுவே இந்து-இஸ்லாமியர் கலாசாரம் என்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ஒருசேர ஆமீன் எனப் பதில் அளித்தனர்” என்றார்.

ஷாஜகான் கால கட்டடக் கலை

இன்றும் ஜாமியா பள்ளிவாசல் சமமான கலாசார சூழலை கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு இஸ்லாமியர்கள் வருகின்றனர். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த நிலையிலும் பள்ளிவாசல் வரலாற்றில் அன்றிருந்த அதே முக்கியத்துவடன் திகழ்கிறது. இந்தப் பள்ளிவாசலில் பல்வேறு வகையான கட்டடக் கலைகள் காணப்படுகின்றன. முகலாய அரசர் ஷாஜகான் கால கட்டக்கலையும் தென்படுகிறது.

மசூதி முழுவதும் சிவப்பு மணல் கற்கள் மற்றும் வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. மூன்று பளிங்குக் குவிமாடங்களில் உள்ள கறுப்புப் பட்டைகள் ஒரு மீட்டர் தூரத்திலிருந்து காணக்கூடிய அளவுக்குத் தெளிவாக உள்ளன. 260 தூண்களில் உள்ள உயரமான வளைவுகள் மற்றும் 15 பளிங்குக் குவிமாடங்கள் முகலாய கட்டிடக்கலையின் மிகச்சிறந்த பாணியைக் மெருகூட்டுகின்றன.

ஜாமியா பள்ளிவாசல்

பள்ளிவாசலின் முக்கிய வழிபாட்டுத் தலம் அதன் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் தெற்குப் பகுதியில் உள்ள மினாரட்டுகளின் வளாகம் 1,076 சதுர அடி அகலம் கொண்டது. 65 மீட்டர் நீளமும், 35 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் வரை தங்கலாம். நான்கு நுழைவாயில்கள், நான்கு தூண்கள் மற்றும் இரண்டு மினாரட்டுகளுடன், இது 100 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு முற்றத்தைக் கொண்டுள்ளது.

ஷாஜகான் இந்த மசூதியை 10 கோடி ரூபாயில் கட்டினார், இதன் கட்டுமானப் பணிகளில் 5 ஆயிரம் கைவினைஞர்கள் ஈடுபட்டனர். பண்பாட்டு நிகழ்வாகவும், கலாசார கட்டடமாகவும், வழிபாட்டுத் தலமாகவும் திகழும் இந்த ஜாமியா பள்ளிவாசல், இந்திய விடுதலை வீரர்களின் புரட்சிகர வரலாற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

பெருமைமிகு 75ஆம் ஆண்டு சுதந்திர தினம்

இந்தப் பள்ளிவாசலுக்கு 1656இல்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்து 75ஆம் ஆண்டை கொண்டாடும் இவ்வேளையில் ஜாமியா பள்ளிவாசல் கடந்த கால புரட்சிகர வரலாற்றை தன்னகத்தே கொண்டு கம்பீரமாக நிற்கிறது.

இதையும் படிங்க : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்- ரொட்டித் துண்டு மர்மங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.