ETV Bharat / bharat

இரத்த தான விழிப்புணர்வு பேனரில் பெண்கள் குறித்து சர்ச்சை வாசகம்!

மத்திய பிரதேசத்தின் பிந்த் நகராட்சியில் பெண்களை கேலி செய்யும் வகையில் ரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வு பேனர்கள் ஒட்டப்பட்ட விவகாரம் சமூக ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிந்த் நகராட்சி, மத்திய பிரதேசம்
bhind municipality madya pradesh
author img

By

Published : Jul 20, 2023, 12:52 PM IST

பிந்த்: மத்திய பிரதேசத்தின் பிந்த் நகராட்சியில் பொதுமக்களிடம் இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பெண்களை கேலி செய்யும் விதமாக வாசகங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த பேனர்களில், "கணவன் மனைவி இடையே சண்டையை குறிக்கும் வகையில் வாசகங்கள் நிரப்பப்பட்டுள்ளன (”बीवी इतना खून नहीं पीता है कि आप रक्त दान नहीं कर सकते”) மற்றும் உங்கள் மனைவி கோபமாக இருந்தால் இரத்த தானம் செய்ய கூறுங்கள்" (”तब तब बीवी से रक्तदान करें जब जब बीबी का पारा चढ़ जाए”) என்று பெண்களை கேலி செய்யும் வகையில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: Manipur Violence: பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!

சர்ச்சைக்குறிய இந்த வாசகங்கள் அடங்கிய விளம்பர பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்ற பிந்த் நகராட்சி உத்தரவிட்டுள்ளது. நவ்ஜீவன் சஹாயார்த்த சங்கதன் அமைப்பு பிந்த் நகரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தூய்மை இயக்கங்கள் மற்றும் இரத்த தான பிரச்சாரங்கள் குறித்த வாசகங்களை எழுதுவதற்காக நகராட்சி அதிகாரிகளை அணுகிய நிலையில் அவர்கள் அளித்த அனுமதியின் பேரிலேயே இந்த வாசகங்களானது சாலையின் தடுப்புகளில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிந்த் நகராட்சி அதிகாரி வீரேந்திர குமார் திவாரி கூறுகையில், "ரத்த தானம் ஊக்குவிப்பது தொடர்பான வாசகங்களை எழுத நவஜீவன் சகாயர்த சங்கதன் அமைப்பு அனுமதி பெற்றது. ரத்த தானம் குறித்த வாசகங்கள் எழுதுவதுடன், தூய்மை குறித்த வாசகங்கள் எழுதவும் அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது போன்ற ஆட்சேபனைக்குரிய வாசகங்களை எழுதுவது தவறு. சர்ச்சைக்குரிய வாசகங்கள் எங்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுண்ட உடனடியாக நீக்கப்பட்டது. மேலும், இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஆனாலும், இந்த போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்ட நிலையில் அதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நரிக்குறவர் காலனிக்கு தெருவிளக்கு வசதி - மாநகராட்சி ஆணையாளர், மேயருக்கு பாசி மணிமாலை அணிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.