ETV Bharat / bharat

வெளியே சென்று காதலியை பார்க்க வேண்டும்... காதலனின் கேள்வியும் மும்பை காவல் துறையின் அசத்தலான பதிலும்!

மும்பை: மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வெளியே சென்று காதலியை பார்க்க எந்த ஸ்டிக்கரை பயன்படுத்த வேண்டும் என காதலர் எழுப்பிய கேள்விக்கு மும்பை காவல் துறை அளித்த பதில் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

மும்பை காவல்துறை
மும்பை காவல்துறை
author img

By

Published : Apr 23, 2021, 8:01 PM IST

கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துவரும் நிலையில், மக்களின் நடமாட்டத்தை குறைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தேவைக்கு ஏற்ப காரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், எந்த ஸ்டிக்கரை பயன்படுத்தினால் காதலியை வெளியே சென்று பார்க்க அனுமதிப்பீர்கள் என பயனாளர் ஒருவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • We understand it’s essential for you sir but unfortunately it doesn’t fall under our essentials or emergency categories!

    Distance makes the heart grow fonder & currently, you healthier

    P.S. We wish you lifetime together. This is just a phase. #StayHomeStaySafe https://t.co/5221kRAmHp

    — Mumbai Police (@MumbaiPolice) April 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதற்கு பதில் மும்பை காவல் துறை அளித்த பதில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. "உங்களுக்கு அது அத்தியாவசியம் என எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எங்களின் பட்டியலில் அது அத்தியாவசிய மற்றும் எமர்ஜென்சி தேவைக்கு கீழ் வரவில்லை. உங்களுக்குள் இடையேயான தூரம்தான் உங்கள் மனதில் பாசத்தை அதிக்கப்படுத்தும். தற்போது, நீங்கள் ஆரோக்கியமாக உள்ளீர்கள்.

பின்குறிப்பு: நீண்டகாலம், நீங்கள் சேர்ந்து வாழ வாழ்த்துகிறோம். இந்தப் பிரிவு தற்காலிகம்தான்" என மும்பை காவல் துறை பதிவிட்டுள்ளது. மும்பை காவல் துறையின் பதிலை பாராட்டியுள்ள ஆனந்த் மகேந்திரா, "நமது மும்பை காவல் துறையிடமிருந்து மனிதநேயமிக்க மற்றும் நகைச்சுவையான பதில்" என குறிப்பிட்டுள்ளது.

நடிகர் மாதவன் ட்வீட்
நடிகர் மாதவன் ட்வீட்

இதுகுறித்து நடிகர் மாதவன் ட்விட்டர் பக்கத்தில், "சிறப்பான பதில். அவருக்கு புரிந்து இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.