புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயங்கப்பட்டுவந்தன. இந்த விமான சேவை கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது.
தற்போது தொற்று பாதிப்பு குறைந்துவரும் காரணத்தால், புதுச்சேரியில் மீண்டும் விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு, அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு அவசியம் தேவை - தமிழிசை சௌந்தரராஜன்