மக்களவை நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் முதல்கட்ட அமர்வு ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதிவரை நடைபெற்றது.
அதன்பின்னர், மார்ச் 8ஆம் தேதி இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது. இந்த இரண்டாம்கட்ட கூட்டத்தொடர் ஏப்ரல் 8ஆம் தேதிவரை திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளின் காரணமாக 14 நாள்களுக்கு முன்னதாகவே நிறைவடைந்தது.
மார்ச் 27ஆம் தேதிமுதல் ஐந்து மாநிலத் தேர்தல் தொடங்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டத்தொடரை முன்னரே முடிக்க கோரிக்கைவைக்கப்பட்டது. அதைக் கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தொடரில் 24 அமர்வுகள் இருந்ததாகவும், இதில் 18 மசோதாக்கள் நிறவேற்றப்பட்டதாகவும் மக்களவை சபாநாயகர் கூறினார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் சரத் பவார் சூறாவளி சுற்றுப்பயணம்!