சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுவருகிறது. ஆனால் தற்போது சிலிண்டர் விலை ரூ.1000 விற்பனையாகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஏழை, நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த மானியத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, http://mylpg.in/ என்ற இணையதளத்திற்கு சென்று கேஸ் இணைப்பு எண்ணுடன் (Gas Id) ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இந்த இணைப்பை வெற்றிகரமாக செய்தவர்களுக்கு வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கொங்கு மண்டலமும் நமதே: மின் வேகத்தில் செந்தில்பாலாஜி - அசைன்மென்ட் சக்சஸ்!