ஹர்தோய்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள தடிவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், ஒரு ஆணும் (21) பெண்ணும் (19) மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கிராமத்துக்கு விரைந்த காவல் துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் காதலித்து வந்துள்ளதாகவும், ஆனால் இருவீட்டார்களும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு துர்கேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..