ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம்! - லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம்

மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா மசோதா, குளிர்கால சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம்
மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம்!
author img

By

Published : Dec 28, 2022, 8:18 PM IST

மகாராஷ்டிரா: நாக்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிராவின் குளிர்கால சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், லோக் ஆயுக்தா மசோதா 2022 நிறைவேற்றப்பட்டது. லோக் ஆயுக்தா மசோதாவை மகாராஷ்டிர மாநிலம் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. இது குறித்த தகவலை, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், குளிர்காலக் கூட்டத் தொடரில் தெரிவித்தார். அனைத்து அமைச்சர்களும் லோக் ஆயுக்தா மசோதா வரம்புக்குள் வருவார்கள்.

குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பே, லோக்பால் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதைப் போல, மகாராஷ்டிராவிலும் லோக் ஆயுக்தா சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.

கடந்த முறை மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி இருந்தபோது, அன்னா ஹசாரே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, சில பரிந்துரைகளை வழங்க இருந்தது. லோக்பால் முறையில் மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தாவை அறிமுகப்படுத்த அன்னா ஹசாரே குழுவின் அறிக்கைக்கு, தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது புதிய அரசாங்கம் அமைந்த பிறகு, அந்தக் குழுவை மீண்டும் உயிர்ப்பித்து, அன்னா ஹசாரே குழு அளித்த அறிக்கையை அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. புதிய லோக் ஆயுக்தா சட்டத்தை உருவாக்குவதற்கான மசோதாவுக்கு எங்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது' எனத் தெரிவித்தார்.

லோக் ஆயுக்தா என்பது ஸ்காண்டிநேவிய கருத்து. இந்த கருத்தினை 1919-ல் ஃபின்லாந்திலும், 1955-ல் டென்மார்க்கிலும் ஏற்றுள்ளனர். நார்வே மற்றும் நியூசிலாந்து 1962-ல் இந்த கருத்தினை ஏற்றுள்ளனர். இதற்காக ஐக்கிய இராச்சியம்(UK) 1967-ல் ஒரு நாடாளுமன்ற ஆணையரை நியமித்தது. உலகின் பல நாடுகள் இதனை ஏற்றுக்கொண்டன.

இதையும் படுங்க: டி-சர்ட் செக்சன் எங்கப்பா இருக்கு...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.