ETV Bharat / bharat

எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா திடீர் கடிதம்! என்ன காரணம்? - ஓம் பிர்லா எம்பிக்களுக்கு கடிதம்

டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக அனைத்து கட்சி எம்.பிக்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதி உள்ளார்.

Lok Sabha Speaker Om Birla
Lok Sabha Speaker Om Birla
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 7:29 PM IST

டெல்லி : கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், 2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில், அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து மக்களவை எம்.பி.க்கள் இருப்பிடத்திற்குள் குதித்து இருவர் களேபரத்தில் ஈடுபட்டனர்.

அந்த இரண்டு பேரையும் பிடித்து எம்.பிக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த டெல்லி போலீசார், 5 பேர் கைது செய்து 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிஆர்பிஎப், டி.ஜி அனிஷ் தயால் சிங் தலைமையில் சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியில் ஈடுபட்டவர்களை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து அனைத்து கட்சி எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அந்த குழு நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிகளை பல்வேறு கோணங்களில் விசாரித்து அதற்கான நடவடிக்கை மற்றும் இது போன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாத நிலை உறுதி செய்யும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார்.

உயர்மட்ட குழு பல்வேறு விதங்களில் நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிகளை விசாரித்து விரைவில் அறிக்கை அளிக்கும் என்றும் ஓம் பிர்லா அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார். முன்னதாக நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி பதிலளிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கனிமொழி உள்பட மக்களவையில் 13 எம்.பிக்களையும், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி என மொத்தம் 14 உறுப்பினர்கள் நடப்பு குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க : 3 மாதங்களுக்கு பின் கூடும் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி! என்னென்ன முடிவுகள் எடுக்க உள்ளன? ஒரு அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.