ETV Bharat / bharat

பட்டப்பகல்லில் எல்ஜேபி(R) தலைவர் அன்வர் கான் சுட்டுக்கொலை: உடலை காரில் வைத்து உறவினர்கள் போராட்டம்! - டெல்லி நெடுஞ்சாலை

பீகாரில் எல்ஜேபி(R) தலைவர் அன்வர் கான் பட்டப்பகலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகல்லில் எல்ஜேபி(R) தலைவர் அன்வர் கான் சுட்டுக் கொலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 11:07 PM IST

பீகார்: கயா பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்களால் எல்ஜேபி (R) தலைவர் அன்வர்கான் கொலை செய்யப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிஹுலி கிராமத்தில் அன்வர் வசித்து வந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனதா தளத்திலிருந்து கெருவா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிராக் பாஸ்வானின் எல்ஜேபி (ஆர்) கட்சியில் உறுப்பினராக இருந்தார். சம்பவத்தன்று அன்வர்கான், சலூன் கடைக்கு தன் மகனுடன் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அன்வர் அலியை சராமாரியாக அவரது மகன் முன்பே சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் நிலை தடுமாறிய அன்வர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கொலை செய்யப்பட்ட முகம்மது அன்வர்கானின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரங்கேறியதால், அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, பதிவு எண் இல்லாத மோட்டர் பைக்குகளில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள், சலூன் கடைக்குள் தன் மகனுடன் இருந்த அன்வர்கானை சராமாரியாக சுடத்தொடங்கினர். இதில் பலத்த காயமடைந்த அன்வர்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை சம்பவத்தால் திகைத்து ஓடி ஒழிந்தவர் ஒருவரை மிரட்டியதோடு, அவரின் மோட்டார் பைக்கையும் வழிப்பறி செய்துவிட்டு தப்பித்துச் சென்றனர்" என அங்கிருந்த பொதுமக்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.

மேலும் இது குறித்து விசாரித்த காவல் அதிகாரி ராஜ்குமார் சிங் கூறுகையில், "அன்வார்கான் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். மேலும், பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் நிறைந்திருந்த பகுதியில், திட்டமிட்டு துணிந்து இந்த கொலை சம்பவத்தை நடத்தியுள்ளனர். மூன்று நபர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் அன்வர்கானை கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கியை அந்தப்பகுதியில் விட்டுச்சென்றுள்ளனர்.

இதனைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். மேலும், துப்பாக்கியால் சுடப்பட்ட அன்வர்கானின் கழுத்துப்பகுதியிலும், மற்றொன்று மார்பு பகுதியிலும் குண்டுகள் துளைக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் கொலையில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவர்" என உறுதியளித்தார்.

முன்னதாக, உடற்கூராய்விற்குப் பின்னர் அன்வர்கானின் உடல் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரைவில் கைது செய்யுமாறு அன்வரின் உடலை ஸ்கார்பியோ காரில் வைத்துக்கொண்டு டெல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அமாஸ் காவல் துறையினர் அவர்களை தடுத்து விரைவில் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர் என உறுதியளித்தப் பின்னரே கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: ம,பி-யில் பாலியல் வன்புணர்வு; அரை நிர்வாண நிலையில் உதவி கோரிய சிறுமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.