ETV Bharat / bharat

குஜராத்தைப் புரட்டிப் போட்ட 'டவ்-தே' புயல்... நள்ளிரவில் கரையை கடந்தது! - போர்பந்தர்- மஹூவா இடையே கரையை கடந்தது

அகமதாபாத்: குஜராத்தில் போர்பந்தர்- மஹூவா இடையே மணிக்கு 190 கிமீ வேகத்தில் டவ்-தே புயல் கரையைக் கடந்தது.

Cyclone Tauktae
'டவ்-தே' புயல்
author img

By

Published : May 18, 2021, 11:39 AM IST

குஜராத் மாநிலம் போர்பந்தர் - மஹூவா இடையே நேற்று இரவு டவ்-தே புயல் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 190 கிமீ., வேகத்தில் காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளிலிருந்து 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. ‘டவ் தே’ என பெயரிடப்பட்ட இந்தப் புயல், அதிதீவிர புயலாகி மாறி, வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது. இந்த புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, மும்பையில் மழை வெளுத்து வாங்கியது. சுழன்று அடித்த காற்றுடன், கனமழையும் கொட்டி தீர்த்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.

குஜராத்தைப் புரட்டிப் போட்ட 'டவ்-தே' புயல்

குஜராத்தில் புயல் கரையை கடப்பது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. கரோனா சிகிச்சை மையத்திலிருந்த நோயாளிகள், மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். போர்பந்தர் அருகே நேற்றிரவு புயல் கரையை கடக்க தொடங்கியது.

அப்போது, சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன.போர்பந்தர், அம்ரேலி, ஜுனாகர், கிர் சோம்நாத், போதத் மற்றும் அகமதாபாத்தின் கடலோரப் பகுதிகளில் அதிகளவில் மழை பதிவானது. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

  • #CycloneTauktae#Update on Search & Rescue Ops Barge 'P305'.
    60 persons rescued so far, incl 18 by offshore support vessel Energy Star in extremely challenging sea conditions.
    Search & Rescue operations will continue through the night.@SpokespersonMoD @DefenceMinIndia

    — SpokespersonNavy (@indiannavy) May 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.