புதுச்சேரி மதுபான விற்பனையாளர்கள் சங்கமும் கால்ஸ் டிஸ்டிலரீஸும் இணைந்து தங்களின் சமூக பங்களிப்பாக கரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைக்கு 130 சாய்வு வசதியுள்ள கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள் என 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருள்களை அன்பளிப்பாக அளித்தன.
இது குறித்து, சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் கூறுகையில், "இத்தகைய சாய்வு வசதியுள்ள , பக்கங்களில் கம்பி பிடிமானம் கொண்ட கட்டில்கள், சுகாதாரத் துறையின் தேவைகளுக்கேற்ப வழங்கப்பட்டது.
கரோனா தொற்றுக் காலம் முடிந்த பின்னரும் அரசு மருத்துவ மனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இவற்றுக்கான தேவைகள் அதிகம் உள்ளதால் இந்த அன்பளிப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும்" எனத் தெரிவித்தார்.