குஜராத்: சிங்கங்கள் பெரும்பாலும் மக்களைத் தாக்குவதில்லை. ஆனால் ஜாஃப்ராபாத் தாலுகாவின் பாபர்கோட் கிராமம் அருகே, ஒரு சிங்கம் 6 பேரை தாக்கியது.
வனத்துறையைச் சேர்ந்த 2 பேர், எஸ்ஆர்டியைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 6 பேர் சிங்கத்தின் தாக்குதலுக்கு உள்ளாகினர். சிங்கத்துக்கு ரேபிஸ் வெறிநோய் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், வனத்துறையினர் சிங்கத்தைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சிங்கத்தின் தாக்குதலுக்குப் பிறகு காயமடைந்த மூன்று பேர் ஜாஃப்ராபாத் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஜாஃப்ராபாத்தில் - பாபர்கோட் சாலையில் வாகனங்களை அதிவேகமாக இயக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிங்கம் பிடிபடும் வரை அவ்வழியாக யாரும் செல்ல வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்றச்செயலாளர் ஹிரா சோலங்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்கம் பிடிபடும் வரை மக்கள் திறந்த வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எம்எல்ஏ அம்ரிஷ் தேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிங்கத்தைப் பிடிக்கும் வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் பிரசாரம் செய்து வருகின்றனர். சிங்கத்தைப் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு இடங்களில் கூண்டு வைத்துள்ளனர். மேலும் பாபர்கோட் சாலையில் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கழிவறைக்கு குழி தோண்டியபோது கிடைத்த தங்க நாணயங்கள் - சில தொழிலாளர்கள் தலைமறைவு!