ETV Bharat / bharat

சூப்பர் ஸ்டார் ஆகும் டொவினோ: “லைட்ஸ், கேமரா, நடிகர் திலகம்” - நடிகர் திலகம் படப்பிடிப்பு ஆரம்பம்

லால் ஜூனியர் இயக்கத்தில் டொவினோ தாமஸின் நடிப்பில் தயாராகவிருக்கும் நடிகர் திலகம் படத்தின் படப்பிடிப்பு வரும் 11ஆம் தேதி தொடங்க உள்ளதாக நடிகர் டொவினோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 9, 2023, 7:50 PM IST

ஹைதராபாத்: தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாள முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும் வலம் வருபவர் டொவினோ தாமஸ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மின்னல் முரளி, 2018 போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. 2018 என்ற படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இந்தப் படம் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கேரளா வெள்ளத்தின்போது நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் டொவினோ தாமஸின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. 2018 படத்தில் டொவினோவின் இயல்பான நடிப்பு ரசிகர்களிடமிருந்து வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றது.

இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் டொவினோ, அவருடைய அடுத்த படத்தை பற்றிய தகவல்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் இவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டொவினோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடிகர் திலகம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், இதனை தற்போது அறிவிப்பதில் மிகுந்த சந்தோஷம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ரசிகர்களின் உற்சாகத்தைக் கூட்டும் வகையில், “லைட்ஸ், கேமரா, நடிகர் திலகம்’’ எனப் பதிவிட்டு, ''அனைவரும் ஒரு சினிமா ஜாம்பவானின் எழுச்சி அத்தியாயத்தைக் காணத் தயாராகி இருங்கள்” என பதிவிட்டுள்ளது சினிமா ரசிகர்களை கூடுதல் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

“டிரைவிங் லைசென்ஸ்” என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் லால்.ஜெ.ஆர் ''நடிகர் திலகம்'' படத்தை இயக்கவுள்ளார். இதில் நடிகர் டொவினோ, டேவிட் படிக்கல் என்ற சூப்பர் ஸ்டார் நடிகராக நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை பாவனா, மலையாளத்தின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரான செளபின் சாகிர் போன்ற முக்கியம் வாய்ந்த முன்னணி நடிகர்கள் கைகோர்க்க உள்ளனர்.

மேலும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மலையாளத்தில் தயாரிக்கப்படும் முதல் படமாகவும் இந்தப் படம் கருதப்படுகிறது. மேலும் இந்தப்படம் பான் இந்தியா பட முறையில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: Jawan Trailer Release Date : ஜவான் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு... இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.