புதுச்சேரி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக எழுந்த பேரலைகளால் நேற்று முன்தினம் (மார்ச்.5) நள்ளிரவு இடிந்து விழுந்த புதுச்சேரி பழைய துறைமுகப் பாலத்தினை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று (மார்ச்.6) ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "கடல் அலை உக்கிரமாக இருப்பதால் நேற்று நள்ளிரவு பழைய துறைமுகப் பாலம் உடைந்துள்ளது. ஆனால், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பது ஆறுதல். பழமை மாறாமல் இந்த பாலம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். முதலமைச்சரிடம் இந்த விருப்பத்தைத் தெரிவிப்போம்.
இந்த இடத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த பாலமும் அதன் மின் விளக்குகளும் புதுச்சேரியின் அடையாளமாக இருக்கிறது. முன்னேற்றம் ஏற்பட்டாலும் அதன் பழமை மாறாமல் வருங்கால சந்ததிகளுக்குப் புதுச்சேரியின் அடையாளத்தைத் தெரிவிப்பதாக இருக்க வேண்டும். இந்த பகுதியை மேம்படுத்துவதாக மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தின் மூலம் ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பகுதி மிகப்பெரிய வாணிபத் தளமாக இருந்துள்ளது. அந்த பழமையை நாம் மீட்டெடுக்க வேண்டும். சாகர்மாலா திட்டத்தின் கீழ் பெரிய சரக்கு கப்பல்கள் வந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் கப்பல் போக்குவரத்து ஏற்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களும் கடலோரப் பகுதி மக்களும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடல் உக்கிரமாக இருக்கிறது என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தியிருக்கிறோம். ராஜ் நிவாஸ் கட்டிடமும் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது.
-
வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றத்தழுத்த நிலை காரணமாக கடலில் ஏற்பட்ட அதிகளவில் கடல் அலையினால் புதுச்சேரி பழைய துறைமுகத்தில் இடிந்து விழுந்த இணைப்பு பாலத்தை ஆய்வு செய்து பாலத்தை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறைமுக அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன்@PMOIndia pic.twitter.com/P3rxt8YMxp
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றத்தழுத்த நிலை காரணமாக கடலில் ஏற்பட்ட அதிகளவில் கடல் அலையினால் புதுச்சேரி பழைய துறைமுகத்தில் இடிந்து விழுந்த இணைப்பு பாலத்தை ஆய்வு செய்து பாலத்தை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறைமுக அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன்@PMOIndia pic.twitter.com/P3rxt8YMxp
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 6, 2022வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றத்தழுத்த நிலை காரணமாக கடலில் ஏற்பட்ட அதிகளவில் கடல் அலையினால் புதுச்சேரி பழைய துறைமுகத்தில் இடிந்து விழுந்த இணைப்பு பாலத்தை ஆய்வு செய்து பாலத்தை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறைமுக அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன்@PMOIndia pic.twitter.com/P3rxt8YMxp
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 6, 2022
அதுவும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். மத்திய அரசு வெள்ள நிவாரணம் ஒதுக்கி இருப்பது கொஞ்சம் ஆறுதல். மேலும், பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறது. புதுச்சேரிக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை மத்திய அரசின் ஆவல்"
என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்துவைத்த முதலமைச்சர் ஸ்டாலின்