ஹைதராபாத்: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், சாண்டி, மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
லியோ திரைப்படம் ஐ - மெக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது. முதல் நாளன்று லியோ திரைப்படத்திற்கு 16 லட்சம் டிக்கெட் விற்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாள் டிக்கெட் விற்பனையில் ஜவான் படத்தை தாண்டியுள்ளது. மேலும் முதல் நாள் டிக்கெட் விற்பனை 20 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்திற்குத் தமிழ் மொழியில் மட்டும் கிட்டதட்ட 13.75 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 2.10 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜவான் படத்திற்கு முதல் நாளில் 15.75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது. சாக்னில்க் என்ற வர்த்தக நிறுவன அறிக்கையின் படி, இந்த வருடத்தில் அதிக டிக்கெட் முன்பதிவான படங்களில் லியோ முதலிடத்தை பிடித்துள்ளது.
அதே நேரத்தில் லியோ படத்தின் டிக்கெட் விலையின் படி, டிக்கெட் முன்பதிவில் ஜவான் 41 கோடியும், லியோ 31 கோடியும் வசூல் செய்துள்ளது. ஜவான் படத்தின் டிக்கெட் விலை சராசரியாக 251 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அதே நேரத்தில் லியோ படத்தின் டிக்கெட் விலை 202 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
லியோ படத்திற்கு முதல் நாள் சிறப்பு காட்சிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லியோ படம் வெளியாகி 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 5 காட்சிகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சி நேரங்கள் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஆளுங்கட்சியான திமுகவால் லியோ படத்திற்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதாக எதிர்க்கட்சியான அதிமுக குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திரைத்துறையின் வளர்ச்சிக்கு திமுக அரசு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதி LCU குறித்து பதிவிட்ட ட்வீட்டில் சஸ்பென்ஸ் உள்ளது, நாளை தெரிந்து கொள்ளுங்கள் - லோகேஷ் கனகராஜ்