புதுச்சேரி: தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தை வழங்கும் திட்டத்தை அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும், தனியார் கல்வி நிலையங்களில் அநியாய கல்வி கட்டணத்தை முறைப்படுத்த குழு அமைக்க வேண்டும், 75 விழுக்காடு கட்டணத்தை தவணையாக செலுத்துவதை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் பேரணி நடைபெற்றது.
இடதுசாரி தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என 200-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். கல்வித்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக வந்த இவர்கள், கல்வித்துறை அலுவலகம் முன்பு ஒன்று கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.
பின்னர் கல்வித்துறை இயக்குநரை சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இதையும் படிங்க: 'மக்களோடு மக்களாகப் பழகினால் முதலமைச்சராகிவிடலாம்': புதுச்சேரி CM-ன் பலே பதில்