ETV Bharat / bharat

நேரு 132ஆவது பிறந்தாள்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி - ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.

நேரு 132ஆவது பிறந்தாள்Leaders pays tribute to jawaharlal nehru on his 132nd birth anniversary
நேரு 132ஆவது பிறந்தாள்
author img

By

Published : Nov 14, 2021, 1:08 PM IST

டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 132ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அவரது நினைவிடத்திலும், ட்விட்டரிலும் அவருக்குத் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்திவருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

  • Tributes to Pandit Jawaharlal Nehru Ji on his birth anniversary.

    — Narendra Modi (@narendramodi) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தலைவர்கள் மரியாதை

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, எங்களுக்குத் தேவையெல்லாம், அமைதியான தலைமுறை ஒன்றுதான் என்ற புகழ்பெற்ற நேருவின் வாசகத்தைக் குறிப்பிட்டு, "உண்மை, ஒற்றுமை, அமைதியைப் பெரிதும் மதித்த இந்தியாவின் முதல் பிரதமரை நினைவுகூருகிறேன்" என நேரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளார்.

  • “What we need is a generation of peace.”
    - Pandit Jawaharlal Nehru

    Remembering India’s first Prime Minister who greatly valued truth, unity and peace. pic.twitter.com/h89MpL39Ph

    — Rahul Gandhi (@RahulGandhi) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி சாந்திவானில் உள்ள நேருவின் நினைவிடத்திற்குச் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர், சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் உள்ள ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

பிரதமராக 17 ஆண்டுகள்

1889ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் (அலகாபாத்) பிறந்தார். இந்தியாவுக்குச் விடுதலை அளிக்கப்பட்டபோது முதல் பிரதமராக நேரு தேர்வானார். அதன்பின்னர், 1952ஆம் நடைபெற்ற முதல் தேர்தலிலும் நேரு, நாட்டின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • Delhi: Congress interim president Sonia Gandhi, LoP in Rajya Sabha Mallikarjun Kharge and other leaders pay floral tribute to India's first PM #JawaharlalNehru at the Central Hall in Parliament House, on his birth anniversary. pic.twitter.com/bGFd9CYSX7

    — ANI (@ANI) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா என்னும் தேசத்தின் கட்டமைப்பில் இவருடைய பங்கு அளப்பரியது. ஏறத்தாழ 17 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேரு, 1964 மே 27ஆம் தேதி காலமானார். அவரின் மறைவிற்குப் பிறகு, அவரது பிறந்தநாளை இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நேரு அஸ்தியை குழந்தைகளின் மனங்களில் கரையுங்கள்... அது அவசியம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.