ETV Bharat / bharat

கேரள ஆளுநருக்கு எதிராக ஒரு லட்சம் தொண்டர்களுடன் எல்டிஎப் பேரணி - கேரளாவில் எல்டிஎப் பேரணி

கேரள மாநிலத்தில் உயர்கல்வி முன்னேற்றத்தை தடுக்கும் வகையிலான ஆளுநர் ஆரிப் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்டிஎப் கூட்டணி சார்பாக ஒரு லட்சம் தொண்டர்களுடன் பேரணி நடத்தப்பட்டது.

LDF protest march with one lakh people against Kerala Governor

author img

By

Published : Nov 15, 2022, 8:05 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உயர்கல்வி முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் ஆளுநர் ஆரிப் கான் செயல்படுவதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்குடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் எல்டிஎப் கூட்டணி சார்பாக ஒரு லட்சம் தொண்டர்களுடன் இன்று (நவம்பர் 15) பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி ஆளுநர் மாளிகை வழியாக நடத்தப்பட்டது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ‘இந்து ராஷ்டிரா’ சித்தாந்தத்தை செயல்படுத்த முயற்சிக்கிறார். அதை கேரளா எதிர்க்கும். அவர் ஜனநாயக விரோதமாக செயல்படுகிறார். ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்து வருகிறார்.

கேரளாவில் மட்டுமல்ல, பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் இதுபோன்ற செயல்களிலேயே ஈடுபட்டுவருகின்றனர். பாஜகாவின் ஆலோசனையின்படியே ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். குறிப்பாக அரசு நிறைவேற்றும் மசோதாக்களை கிடப்பில் போடுகிறார்கள். கேரளாவின் உயர்கல்வித் திட்ட மசோதா முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை ஆளுநர் முடக்கப்பார்க்கிறார். அதைக்கண்டித்தே இந்த பேரணி நடத்தப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்... குவிந்த 900 புகார்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.