நாஷிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக்கில் நெடுஞ்சாலை திறப்பு விழாவில் ஒன்றிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று (அக். 5) கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இந்திய இசைக்கருவிகளான ஹார்மோனியம், தபேளா போன்றவற்றின் ஒலிகளைப் கட்டாயம் பயன்படுத்த சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
ஆம்புலன்ஸ், காவல்துறை வாகனங்களின் சைரன் ஒலிகளைக்கூட ஆல்-இந்தியா ரேடியோவில் தொடக்கத்தில் இசைக்கப்படும் இனிமையான ஒலிகளை போல மாற்றும் திட்டம் உள்ளது.
உயர் அலுவலர்கள், அமைச்சர்கள் சாலையில் செல்லும்போது எழுப்பப்படும் ஒலிகள் மிகவும் வெறுப்பாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இரு-விரல் பரிசோதனை செய்யப்படவில்லை - விமானப்படை தலைமை மார்ஷல் விளக்கம்