ETV Bharat / bharat

சிறப்பு அந்தஸ்து ரத்தாகி 2 ஆண்டுகள் நிறைவு... எப்படி இருக்கிறது காஷ்மீர்?

author img

By

Published : Aug 5, 2021, 10:47 AM IST

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அங்கு சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளதாக ஐஜி சிஆர்பிஎஃப் சாரு சின்ஹா ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

ஐஜி சிஆர்பிஎஃப் சாரு சின்ஹா
ஐஜி சிஆர்பிஎஃப் சாரு சின்ஹா

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து (Article 370) 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. அதன்படி மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு ஆதரவுகளும், எதிப்புகளும் கிளம்பின.

இதனிடையே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இந்த முடிவு பயனற்றது என்று காஷ்மீர் எதிர்க்கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் சட்ட ஒழுங்கு மேம்பட்டுள்ளது என்கிறார் ஐஜி, சிஆர்பிஎஃப் சாரு சின்ஹா.

ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிவது மிகவும் சாவாலானது

இதுகுறித்து ஈடிவி பாரத்துக்கு சாரு சின்ஹா அளித்த சிறப்புப் பேட்டியில், "ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிவது என்பது நாட்டின் மற்ற பகுதிகளில் வேலை பார்ப்பதைவிடவும் மிகவும் வேறுபட்டது, சவாலானது.

இருப்பினும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இங்கு சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. குறிப்பாக பள்ளத்தாக்குப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு கணிசமாக மேம்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் போர் குணம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிறு கல்வீச்சுகள், தடியடி மட்டுமே நிகழ்கின்றன. அவற்றையும், முற்றிலும் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது ஒரு நேர்மறையான முயற்சியாகும். இத்தகைய சூழலில் மட்டுமே மாநிலத்தின் வளர்ச்சி செழிப்பாக இருக்க முடியும். இப்பகுதியில் அமைதியை, ஒழுங்கை நிலைநாட்ட இளைஞர்களை பணிக்கு அமர்த்துவது அவசியமாகும். அதற்காக, சிஆர்பிஎஃப் பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. விரைவில், ஜம்மு - காஷ்மீரில் போர் குணம் களைக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 'இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை' - இம்ரான் கான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.