ETV Bharat / bharat

கொச்சி வழியாக லட்சத்தீவு செல்லும் திட்டத்தை கைவிட்ட பிரஃபுல் படேல்

author img

By

Published : Jun 14, 2021, 2:40 PM IST

பிரஃபுல் படேலின் புதிய நிர்வாக நடவடிக்கைகள் லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அங்குள்ள மக்களை காங்கிரஸ் தரப்பில் சந்தித்து பேச அனுமதி கோர விரும்பினோம். ஆனால், அவர் கொச்சிக்கு வருவதை தவிர்த்துவிட்டார் என்றார்.

Lakshadweep admin ducks travel to island via Kochi

கொச்சி: லட்சத்தீவுக்கு கொச்சி வழியாக பயணிக்கவிருந்ததை பிரஃபுல் படேல் தவிர்த்துவிட்டார் என கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் படேல் கொச்சி வரவிருப்பதாக கேள்விப்பட்டு, கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஹைபி எடன், டி.என். பிரதாபன் ஆகியோர் கொச்சி விமான நிலையத்தின் விவிஐபி தளத்திற்கு வந்துள்ளனர். ஆனால், பிரஃபுல் படேல் அங்கு வரவில்லை.

இதுகுறித்து ஹைபி எடன், சிறப்பு விமானத்தில் கொச்சி வந்து அங்கிருந்து பிரஃபுல் படேல் லட்சத்தீவுக்கு செல்லவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அவர் இங்கு வராமல் டாமன் டையூ வழி சென்றிருக்கிறார் என தெரிவித்தார்.

லட்சத்தீவு மக்கள் போராட்டம்
லட்சத்தீவு மக்கள் போராட்டம்

மேலும் அவர், பிரஃபுல் படேலின் புதிய நிர்வாக நடவடிக்கைகள் லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உள்ளது. எனவே அங்குள்ள மக்களை காங்கிரஸ் தரப்பில் சந்தித்து பேச அனுமதி கோர விரும்பினோம். ஆனால், அவர் கொச்சிக்கு வருவதை தவிர்த்துவிட்டார் என்றார்.

பிரஃபு படேலின் புதிய நிர்வாக நடவடிக்கைகளால் லட்சத்தீவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 20ஆம் தேதி வரை அவர் லட்சத்தீவில் இருக்க முடிவு செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.