பெங்கரூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள லேடி கோசென் மருத்துவமனையானது, அரசு மகப்பேறு மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் அதனை சுற்றியுள்ள ஏழு மாவட்டங்களில் இருந்து வரும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குறிப்பாக, ஒரு மாதத்திற்கு 700 முதல் 750 பிரசவங்கள் இங்கு பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மருந்துமனை நிர்வாகம், ரூ.45 லட்சம் மத்திப்பீட்டில் தாய்ப்பால் வங்கியை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நிர்வாகம் தரப்பில், குறைந்தளவு தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்களுக்கும், பிரசவத்தின் போது தாயை இழந்த தவிக்கும் குழந்தைகளுக்கும் உதவும் வகையில், தாய்ப்பால் வங்கி அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம், குழந்தைகளுக்கு தடையின்றி தாய்ப்பால் கிடைக்கும். தாய்ப்பால் காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறாது. இந்த வங்கி மங்களூரு ரோட்டரி கிளப் உடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவின் முதல் தாய்பால் வங்கி தொடக்கம்