கர்நாடகா: சிருங்கேரி கர்நாடகாவின் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும். ஸ்ரீ மலாஹனிகரேஷ்வர் கோயில் கர்நாடகாவின் தென்கோடியில் உள்ள சிருங்கேரியின் சாரதாபீடத்தில் உள்ளது. சிருங்கேரி சாரதா கோயிலில் இருந்து 1 கி.மீ., தொலைவிலுள்ள மலையில் மலாஹனிகரேஷ்வர் சிருங்கேரியின் முதன்மைக்கடவுளாக அமைந்துள்ளார். தக்ஷிணாம்நாய சங்கர சாரதா பீடத்தின் அனைத்து பிரமாணர்களும் பழங்காலத்திலிருந்தே இந்த மலாஹனிகரேஷ்வரரை வணங்கி வருகின்றனர்.
மாலஹனிகரேஸ்வரருக்கு கோயிலின் முன்புறம் 60 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி இன்று (பிப்.12) நடைபெற்றது. சிவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, சாரதா பீடத்தில் 11 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.12) மலாஹனிகரேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாரதிதீர்த்த மஹாஸ்வாமியும், விதுசேகர பாரதி மகாசுவாமியும் இவற்றை நடத்தினர்.
அதிருத்ர மகாயாகம், சதுர்வேதங்கள், அஷ்டாதச புராண பாராயணம், ஜப ஹோமம் ஆகியவை நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மலாஹனிகரேஸ்வரர் சந்நிதியில் ஸ்தம்ப கணபதிக்கு கும்பாபிஷேகமும், சஹஸ்ர கலசாபிஷேகமும் நடைபெற்றது. அதன்பின், சுவாமிக்கும், அம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா பூஜை, மஹா நீராசனம் நடந்தது. பின்னர் விமான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
இது குறித்து சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சுவாமிகள் விதுசேகர பாரதி மகாசுவாமி கூறுகையில், ''கோயிலில் புதிய ராஜகோபுரத்திற்கு சஹஸ்ர (ஆயிரம்) கலசாபிஷேகமும், மகா கும்பாபிஷேகமும் நடந்தது. சிருங்கேரி சாரதா பீடத்தின் பாரதி தீர்த்த சுவாமிகள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் சிருங்கேரி கோயிலுக்கு வந்து இறைவனின் அருள் பெற வேண்டும். அனைவரும் நலமாக இருக்கட்டும்'' எனக் கூறினார்.
வரும் 15ஆம் தேதி சுவாமி மகரதோட்சமும், துவஜாரோஹணமும் நடக்கிறது. இம்மாதம் 18ஆம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் முன்னிலையில் சதருத்ராபிஷேகம் நடக்கிறது. ஸ்ரீ பவானி மலாஹனிகரேஸ்வரர் சந்நிதியில் மகாபூஜை, குருநிவாசத்தில் உள்ள சந்திரமௌலீஸ்வரசுவாமிக்கு இரவு முழுவதும் சாதுரியம பூஜை நடக்கிறது.
20ஆம் தேதி லட்ச மல்லிகார்ச்சனை, மகாநீராஜனம், ரதாரோஹணம், மகரதோத்ஸவம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் 21ஆம் தேதி அவப்ரித சங்கமம், அதிருத்ர மஹாயான பூர்ணாஹுதி, மாலை சந்தானோத்ஸவம், தெப்போத்ஸவம், கொடியேற்றம் ஆகியவை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் பழனியில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு