எர்னாகுளம்(கேரளா): கேரள மாநிலம் கோழிக்கூட்டிற்கு, அலுவாவிலிருந்து செல்ல இருந்த KSRTC பேருந்தை காணவில்லை என புகார் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் உடனே பேருந்தை கலூர் அருகே இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து விசாரணையில் பேருந்தை ஓட்டி வந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்தது.
இந்த பேருந்து எடுத்துச்செல்லும் காட்சிகள் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகளில் வந்த நபர் மெக்கானிக் ஆடை அணிந்து வந்து பேருந்தை ஓட்டிச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் கோழிக்கோடு செல்வதற்காக விரைவு பயணிகள் பேருந்து கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் காலை 8.20 மணியளவில் நடந்ததாக போலீஸார் கூறினர்.
பயணத்திற்கு முன் மெக்கானிக் பேருந்தை சோதனைக்கு எடுத்துச் சென்றதாக பேருந்து நிலையத்தில் இருந்த ஊழியர்கள் நினைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். அலுவா அரசு மருத்துவமனை அருகே மற்றொரு வாகனத்தில் மோதிய அப்பேருந்து நிற்காமல் அங்கிருந்து வேகமாக சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மின்சார ரயில் நடைமேடையில் ஏறிய விவகாரம் - ஓட்டுநர் சஸ்பெண்ட்!