ETV Bharat / bharat

கண்டுபிடிப்புகளின் அரசன் - தாம்ஸ் ஆல்வா எடிசன் குறித்து அறிந்துகொள்வோம்!

மின்விளக்கு, திரைப்படக்கருவி, கிராமபோன் உள்பட இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1,300. அவற்றில் 1,093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார் என்றால் மலைப்பாக இருக்கும். ஆம் கண்டுபிடிப்புகளின் அரசன் தாமஸ் ஆல்வா எடிசன் குறித்து அறிந்து கொள்வோம்.

author img

By

Published : Feb 11, 2021, 11:21 PM IST

Thomas Alva Edison
Thomas Alva Edison

ஹைதராபாத்: தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாள் பிப்ரவரி 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் ஒஹயோ மாநிலத்தில் மிலான் என்கிற நகரத்தில் 1847ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் சாமுவேல் எடிசன், தாயார் பெயர் நான்சி.

எடிசன் சிறு வயதில் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனால் அவரது எட்டாவது வயதில்தான் கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்ல முடிந்தது. ஒரு சில மாதங்களுக்குப்பிறகு ஒருநாள் எடிசனின் ஆசிரியர் எடிசன் மூளைக்கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரால் படிப்பை தொடரமுடியாது என்று கூறி அவரை வீட்டுக்கு திருப்பி அனுப்பி விட்டார்.

Thomas Alva Edison
தாம்ஸ் ஆல்வா எடிசன்

1859ஆம் ஆண்டு தனது பன்னிரண்டாவது வயதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்த எடிசன் ரெயிலில் செய்தித்தாள்கள், காய்கறிகள், பழங்களை விற்கத்தொடங்கினார். அவற்றின் மூலம் கிடைத்த சிறிய லாபத்தில் இருந்து அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள், இதழ்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கினார்.

1859இல் ரெயிலில் பத்திரிகை அச்சடித்து பயணிகளுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பு அவருக்குகிடைத்தது. அதனை நல்லமுறையில் பயன்படுத்த நினைத்த எடிசன் ரெயிலின் கடைசி பெட்டியில் அச்சு எந்திரம் ஒன்றை நிறுவி, தினந்தினம் சுடச்சுட செய்திகளுடன் செய்தித்தாளை அச்சடித்து பயணிகளுக்கு வழங்கினார். இதன் மூலம் அவருக்கு கணிசமான வருவாய் கிடைத்தது. அதே பெட்டியில் இன்னொரு புறத்தில் ரசாயன பரிசோதனைகள் செய்வதற்காக ஆராய்ச்சி கூடம் ஒன்றை நிறுவினார். பத்திரிகை வேலைகள் இல்லாத சமயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரு முறை வேதிப்பொருளொன்று சிந்தியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த ரெயில் பெட்டி தீப்பிடித்தது. ரெயிலின் நடத்துனர் கோபப்பட்டு எடிசனின் கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டார். இதனால் அவருக்கு காது கேட்கும் திறன் குறைந்தது. இந்த பின்னடைவால் எடிசன் சற்றும் மனம் தரவில்லை.

Thomas Alva Edison
தாம்ஸ் ஆல்வா எடிசன்

கண்டுபிடிப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கில், முதல் ஆராய்ச்சி சாலையை நியூஜெர்சி மாகாணத்தில் நெவார்க் நகரில் 1870-ல் நிறுவினார். அவர் கண்டுபிடிப்புகள் ஏராளமாக இருந்தாலும் கூட இன்றைக்கும் நாம் பெருமளவில் பயன்படுத்துகின்ற ஒலி, ஒளி சாதனங்களுக்கு எல்லாம் அவர்தான் தந்தை. ஒலியைப் பதிவு செய்து மீண்டும் ஒலிக்க செய்யும் போனோகிராப் என்கிற ஒலி வரைவியை கண்டுபிடித்தவர்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்தாலும் அதனைக் கொண்டு ஒளியூட்டக்கூடிய வழிமுறைகளுக்கு அறிவியல் உலகம் பெரும் முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில் எடிசனின் பங்கு ஈடு இணையற்றது. தான் வசித்து வந்த நியூயார்க் நகரில் வீடுகளிலும், வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால் அந்த ஆசை எளிதில் நிறைவேறும் என்று மற்ற விஞ்ஞானிகள் நம்பவில்லை. ஒளிரக்கூடிய பல்புகளை கண்டுபிடித்தவர். வெற்றிட கண்ணாடி குமிழிக்குள் ஒளிரும் தன்மைகள் கூடிய இழைகள் வழியாக மின்சாரம் செலுத்தப்படும் போது வெளிச்சம் கிடைக்கிறது.

அதற்கு முன்பே இதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாகப் பலர் ஈடுபட்டிருந்தாலும்கூட நீண்டநேரம் எரியக்கூடிய குறைந்த விலையில் தயாரிக்கும் வகையில் கார்பன் மயமாக்கப்பட்ட மூங்கில் இழைகளைப் பயன்படுத்தி உலகிற்கு ஒளி காட்டினார் எடிசன். நியூயார்க் உலகிலேயே மின் மயமாக்கப்பட்ட முதல் நகரமானது.

Thomas Alva Edison
தாம்ஸ் ஆல்வா எடிசன்

மின்சாரத்தைச் சேமிக்கக்கூடிய மின்சக்தி சேமிப்புக் கலங்களை கண்டுபிடித்த பெருமையும் அவருக்கு உண்டு. இன்றைய உலகம் ஒலி, ஒளி இவைகளில் மூழ்கி இருக்கிறது. இதற்கு வித்திட்டவர் தாமஸ் ஆல்வா எடிசன் முதல் முதலாக நகரும் படத்தை (திரைப்படத்தை) உருவாக்கும் கினெட்டாஸ்கோப் கருவியை கண்டுபிடித்தவர் எடிசன்.

Thomas Alva Edison
தாம்ஸ் ஆல்வா எடிசன்

தன்னுடைய 84ஆவது வயதில் 1931 அக்டோபர் 18ஆம் தேதி நியூ ஜெர்சி மாகாணத்தில் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அப்போதைய அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 21ஆம் தேதி மாலை அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மின் விளக்குகளை நிறுத்தும்படி ஆணையிட்டார். அந்த ஒரு நிமிடம் நாட்டில் உள்ளோர் அனைவரும் எடிசனையும் அவரது கண்டுபிடிப்புகளை நினைவு கூர்ந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.