பெங்களூரு: பிரசாந்த் நீல் இயக்கிய KGF திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றவர் கிருஷ்ணா ஜி ராவ். KGF முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டிலும் முக்கியப்பங்கு வகித்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார்.
இதனால், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மூச்சு பிரச்னைக்கு சிகிச்சைப் பெற்று வந்தார். ஐசியூவில் சிகிச்சைப்பெற்று வந்த கிருஷ்ணா ஜி ராவ், இன்று சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
இவரது மரணம், அவரது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்!