லக்னோ: உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வந்த ஸ்வதந்திர தேவ் சிங் அண்மையில் ராஜினாமா செய்தார். இதனால் புதிய மாநிலத் தலைவரை நியமிக்கும் பணியில் பாஜக மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதனிடையே உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவைச் சந்தித்திதார். இதனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த பாஜக தலைவராக கேசவ் மவுரியா நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகின.
இதற்கு மவுரியா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படமால் இருந்துவந்தது. இந்த நிலையில், கேசவ் மவுரியா தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசாங்கத்தைவிட கட்சி பெரியது" என்று பதிவிட்டுள்ளார். இதனால் பாஜக மேலிடம் மவுரியாவையே உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராக நியமிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணை முதலமைச்சர் மவுரியா உத்தரப் பிரதேசத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். 2017ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராக சில ஆண்டுகள் பதிவிவகித்துவந்தார்.
இதையும் படிங்க: டெல்லி மதுபான ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை... கேசிஆர் மகள் கவிதா விளக்கம்...