திருவனந்தபுரம்: கார்த்திகை தீபம் கொண்டாட்டங்கள் சபரிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தன.
கார்த்திகை பௌணர்மி தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை தீபம் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இக்கொண்டாட்டங்கள் நேற்றும் வழக்கமான உற்சாகத்தில் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் பக்தர்கள் பூக்களால் அலங்கரித்திருந்ததை காண முடிந்தது.
மேலும் தீபங்களும் ஏற்றப்பட்டிருந்தன. சபரிமலை விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது. இதேபோல் வாரணாசியிலும் வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டன.
சரயு நதிக்கரையில் 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. வாரணாசியில் கார்த்திகை 15ஆம் நாளான இன்று தேவ் தீபாவளி இன்று கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.30) கலந்துகொள்கிறார்.
இதையும் படிங்க: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை!