திருவனந்தபுரம்: கோவிட் இரண்டாம் அலையின்போது கேரளத்திலும் உயிரிழப்புகள் அதிகரித்தன.
கோவிட் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் திணறிவருகின்றன. இந்நிலையில் 2021ஆம் ஆண்டு கோவிட் இரண்டாம் அலை தாக்கியது. அப்போது நாடே மூச்சு விட சிரமப்பட்டது.
நாடு முழுக்க ஆக்ஸிஜன்.. ஆக்ஸிஜன்.... என்ற ஓலக் குரல்கள் கேட்டன. இதற்கிடையில் அண்டை மாநிலமான கேரளத்தில் பாதிப்புகள் குறைந்துள்ளன. எனினும் கடந்த 45 நாள்களில் உயிரிழப்புகள் 53 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன.
அந்த வகையில், ஜூன் 14ஆம் தேதி வரை 11,342 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மே மாதத்தில் இது 3,507 ஆக இருந்தது. அதேபோல் மாவட்ட வாரியான தகவலின்படி திருவனந்தபுரத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அங்கு இறப்பு எண்ணிக்கை 2,401 ஆக உள்ளது. இதைத் தொடர்ந்து 1240 இறப்புகளுடன் திருச்சூர் உள்ளது. மற்ற மாவட்டங்களான, கோழிக்கோடு (1180), எர்ணாகுளம் (1103), பாலக்காடு (917), ஆலப்புழா (874), மலப்புரம் (850), கண்ணூர் (759), கொல்லம் (668), கோட்டயம் (518), பத்தனம்திட்டா (352), வயநாடு (190), காசர்கோடு (185) மற்றும் இடுக்கி (103) என இறப்புகள் பதிவாகியுள்ளன.