கேரளா: கேரளா மாநிலம் இடுக்கியில் குடும்பத் தகராறில் உறவினர் ஒருவர் ஆறு வயது சிறுவனை சுத்தியலால் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தான்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், "இடுக்கிப் பகுதியிலுள்ள அனச்சால் என்ற இடத்தில் இன்று (அக். 3) இச்சம்பவம் நடந்துள்ளது. இரு குடும்பங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதில் கோபமடைந்த உறவினர் ஒருவர் அவரது உறவினரான ஆறு வயது சிறுவனை சுத்தியலால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த சிறுவன் அல்தாஃப் உயிரிழந்தார்.
இந்தத் தகராறில் சிறுவனின் தாய், சகோதரி, பாட்டி உள்ளிட்டோரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். சிறுவனைத் தாக்கிய உறவினர் ஷாஜஹான் தப்பி ஓடியுள்ளார்" என்று தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் 22,842 பேருக்கு கரோனா