எர்ணாகுளம் (கேரளா): குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கேரள உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் வடக்கரை மற்றும் வடகஞ்சேரி காவல் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த முன்ஜாமீன் மனுக்கள் நீதிபதி கவுசர் எடப்பகாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “பொய் வழக்குகளில் அப்பாவி மக்கள் சிக்கிக் கொள்கின்றனர். இது போன்ற சூழ்நிலைகளில், உண்மைகளை ஆராய்ந்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். தனது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குற்றவாளிகளைத் தண்டிப்பது போலவே, அப்பாவிகளைப் பாதுகாப்பதும் முக்கியம். மேலும், குடும்ப நீதிமன்றங்களில், தந்தைகள் மீது பல தவறான குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இது போன்ற சூழ்நிலையி,ல் முன்ஜாமீன் தடை செய்யப்பட்டால் அது நீதி மறுக்கப்பட்ட செயலாகும்” என நீதிபதி கவுசர் எடப்பகாத் சுட்டிக் காட்டினார்.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் விதி உள்ளது. இந்தத் தடை எப்பொழுதும் பொருந்தாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதையும் படிங்க: 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை!