கேரளா: எட்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அந்தந்த பதவிகளில் தொடரலாம் எனவும் உரிய நடைமுறைக்குப் பின்னரே அவர்களை நீக்க முடியும் என்றும் கேரளா உயர் நீதிமன்றம் இன்று (அக். 24) தெரிவித்தது.
எட்டு துணைவேந்தர்கள் தாக்கல் செய்த அவசர மனுவை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், இன்றைக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் கெடு விதித்துள்ள நிலையில், கேரள ஆளுநர் அனுப்பிய தகவல் சரியாக இல்லை என்று கூறியுள்ளார்.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னரே துணைவேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீதிபதி குறிப்பிட்டார். 24 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்யச் சொன்ன ஆளுநரின் முழு நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்று துணைவேந்தர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியா ஒருபோதும் போரை முதல் வாய்ப்பாக கருதாது - பிரதமர் மோடி