திருவனந்தபுரம்: கேரளா மாநில சட்டப்பேரவை மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை அம்மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் இன்று (மார்ச் 11) தாக்கல் செய்தார்.
இதில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என 'தனி செயலி' ஒன்று உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெளிமாநில (அ) வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு வேலைத்தேடி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் புதிதாக உருவாக்கப்படும் செயலியில் பதிவுசெய்யும்பட்சத்தில் அவர்களுக்கு பிரத்யேகமான எண் ஒதுக்கப்படும்.
தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும்:-
இந்தச் செயிலில் பதிவு செய்வதன் மூலம், மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை, அவர்களின் வேலையிடம், அவர்கள் கேரளாவில் பணிபுரிய உள்ள கால அளவு போன்ற தரவுகள் அரசுக்குக் கிடைக்கும். இதன்மூலம், அவர்களின் வாழ்வாதாரம் உயரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செயலியை உபயோகிப்பது மூலம், மாநில அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை புலம்பெயர் தொழிலாளர்கள் எளிதாகப் பயனடைய முடியும்.
மேலும், இது அவர்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து சட்டரீதியான பாதுகாப்பினை உறுதியாக்கும் என்றும், சமூக விரோதச் செயல்களை செய்து பிற பகுதியில் இருந்து கேரளா வருபவர்களையும் இதன்மூலம் அடையாளம் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்கு 'அதிதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தந்தையால் கர்ப்பமான சிறுமி: 31 வார கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி