ETV Bharat / bharat

நிலச்சரிவில் சிக்கிய பயணிகளின் உயிரைக் காத்த அரசுப் பேருந்து ஊழியர்!

சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சென்ற கார் சிக்கியுள்ளது. இதனைக் கண்ட அரசுப் பேருந்து ஊழியர், தன் உயிரை துச்சமென மதித்து, அவர்களைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

KSRTC, landslide, kerala, கேரளா வெள்ளம், கேரளா போக்குவரத்துத் துறை, கேரளா மழை, நிலச்சரிவு, kerala floods, idukki incident
நிலச்சரிவில் சிக்கிய பயணிகளின் உயிரை காத்த அரசுப் பேருந்து ஊழியர்
author img

By

Published : Oct 17, 2021, 11:07 PM IST

இடுக்கி (கேரளா): இடுக்கி புழுப்பறாவில் நேற்று நிலச்சரிவில் சிக்கிய பயணிகளின் உயிரை கேரள அரசுப் பேருந்து ஊழியர் காப்பாற்றினார்.

கேரள மாநில அரசுப் பேருந்தின் ஊழியர் ஜெய்சன் ஜோசப், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் குமார் படேலுடன் சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரைக் காபாற்றிய காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

குமுளி - முண்டகாயம் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, அந்தச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பிபின் குமாரின் கார் நிலச்சரிவில் சிக்கியது.

நிலச்சரிவில் சிக்கிய பயணிகளின் உயிரைக் காத்த அரசுப் பேருந்து ஊழியர்

அந்த வாகனத்தில், பிபின் குமாருடன் அவரது மனைவி, மகன், ஓட்டுநர் என நான்கு பேர் பயணித்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியதால் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை மீட்ட அரசுப் பேருந்து ஊழியர், அனைவரையும் அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

இதையும் படிங்க: கேரள வெள்ளம்: அடித்தளத்துடன் அடித்துச் செல்லப்படும் வீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.