திருவனந்தபுரம் (கேரளா): கேரளாவில் வெட்டிங் போட்டோ ஷூட் எடுத்த தம்பதியை தென்னை மட்டையால் அடித்து யானை ஒன்று விரட்டிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நவீன கால திருமண விழாக்களில் ப்ரீ மற்றும் போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அதேநேரம், வெட்டிங் போட்டோ ஷூட்களில் எதிர்பாரத விதமாக நடைபெறும் சில சம்பவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக மாறி வருகின்றன.
அப்படி ஒரு சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது. வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்த தம்பதியை யானை ஒன்று தென்னை மட்டையால் அடித்து விரட்டியுள்ளது.
வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், பயங்கர வைரலாகி வருகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதையும் படிங்க: