திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில் கார்த்தி-ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் ஜோடி நேற்று (டிசம்பர் 12) அறை எடுத்து தங்கினர். அதன்பின் நள்ளிரவில் ரேகா கூட்டலிட்டுள்ளார். இதைக்கேட்ட ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கார்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையும், ரேகாவின் காதில் இருந்து ரத்தம் வழிவதையும் கண்டனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து கார்த்தியின் உடலை கைப்பற்றினர். இதனிடயே ரேகா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த கார்த்தி-ரேகா இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு எதிரப்பு கிளம்பவே தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
இதற்காக பத்தனம்திட்டாவில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து முதலில் விஷம் அருந்தியுள்ளனர். இதையடுத்து கார்த்தி தூக்கிட்டுக்கொண்டார். இவர் உயிர்பிரிவதை கண்ட ரேகா அதிர்ச்சியடைந்து கூட்டலிட்டுள்ளார். அதன்பின் ஹோட்டல் ஊழியர்கள் அவரை மீட்டனர். அதன்பின் ரோகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தந்தையை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய மகன்