திருவனந்தபுரம்: மாநில நலன் கருதி கோவிட் தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி கேரள நிதியமைச்சர் கேஎன் பால கோபால் உத்தரவிட்டுள்ளார்.
கேரள நிதியமைச்சர் கேஎன் பால கோபால் இன்று (ஜூன்4) கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி தொகுப்பினை வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாநில நலன் கருதி கோவிட் தடுப்பூசி தொடர்பான ஆய்வுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “மாநிலத்தில் தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக பல்வேறு வைரலாஜி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.
மேலும், பயோ 360 லைஃப் சயின்சஸ் பார்க் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க வைராலஜி நிறுவனம் முன்முயற்சி எடுத்து, அவற்றின் உற்பத்தி பிரிவுகளை மாநிலத்தில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்.
இந்த நிலையில், சுகாதாரம் தொடர்பான உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் ரூ .10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை ஸ்ரீ சித்திரை இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ராஜிவ் காந்தி பயோடெக்னாலஜி சென்டர், இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் வைராலஜி, வி.எஸ்.எஸ்.சி எலெக்ட்ரானிக்ஸ் டெஸ்ட் லேபரேட்டரி மற்றும் பல்கலைக்கழகங்கள், பிற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீறும் சிக்ஸர் சித்து, ஆட்டம் காணும் பஞ்சாப் முதல்வர் நாற்காலி!