ETV Bharat / bharat

பஞ்சாப் மாநிலத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவத் மண் தேர்வு - ஆம் ஆத்மி கட்சி

வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி நடக்கவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது. வேட்பாளர் தேர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்டு பகவத் மண் என்பவரை வேட்பாளராக தேர்வுசெய்துள்ளது, ஆம் ஆத்மி.

பஞ்சாப் மாநில தேர்தல் : ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவத் மண் தேர்வு

author img

By

Published : Jan 18, 2022, 10:20 PM IST

பஞ்சாப்(மொஹாலி): பிப்ரவரி 20இல் நடக்கவிருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவத் மண்ணை தேர்வு செய்துள்ளது,அக்கட்சியின் தலைமை.

மக்களிடம் கருத்துக்கணிப்பு:

இந்த முடிவு, மக்களிடம் ஆம் ஆட்மி கட்சி நடத்திய கருத்துக்கணிப்பின் மூலமாக எடுக்கப்பட்டதாகும். தங்களின் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மக்களிடம் ஒரு தொலைபேசி எண்ணைத் தந்து தேர்வு செய்யுமாறு கேட்டுகொண்டது, ஆம் ஆத்மி கட்சி.

ஏறத்தாழ 21.59 லட்ச மக்கள் பதிவு செய்த கருத்துக் கணிப்பில்,15 லட்சம் பேர் பகவத் மண்ணை தேர்வுசெய்துள்ளனர்.

இன்று(ஜன18),தான் முதலமைச்சர் வேட்பாளராக தேர்வான பிறகு,உணர்ச்சிவசமான பகவத் மண், 'நான் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு இடைக்கருவியாக இருப்பேன். பல லட்சம் பேர் என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு பெரும் பொறுப்பை தந்துள்ளனர்.

நான் நிச்சயம் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யப் பாடுபடுவேன்’ எனத் தெரிவித்தார்.

மேலும்,போதைப்பொருளை சிறுவர்களை வைத்துக் கடத்தி வரும் விவகாரத்தை, முதன்மைப் பிரச்னையாக கையில் எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவு:

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பஞ்சாப் முதலமைச்சர் போட்டியில் இல்லை என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

மேலும்,2017இல் சீக்கிய சமூகத்தில் இருந்து முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்வு செய்யாததே தோல்விக்குக் காரணம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் எண்ணியதே, இம்முறை இந்த முடிவு எடுக்கக் காரணமாக இருக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பகவத் மண், அரசியலில் பல்வேறு காலகட்டத்தில் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.

அரசியல் தாண்டி,கலையுலகிலும் நடிகராக பல காமெடி தொலைக்காட்சி நாடகங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும்,தனது குடிப்பழக்கத்தினால் சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். சில ஆண்டுகள் முன்பு, தனது குடிப்பழக்கத்தால் ’பர்கடி மோர்சா’ வளாகத்திற்குள் இவருக்குத் தடை விடிக்கப்பட்டதாகவும் 2015இல் நடந்த இவரின் விவாகரத்திற்கு இவரின் குடிப்பழக்கம் தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:Andhra Pradhesh Night Curfew:ஆந்திரப் பிரதேசத்தில் அமலுக்கு வருகிறது இரவுநேர ஊரடங்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.