ETV Bharat / bharat

'வளர்ந்துவரும் பாரதிய ஜனதா; அச்சத்தில் முதலமைச்சர்!' - பாஜகவின் வளர்ச்சியால் கேசிஆர் அரசு அச்சம்

மத்திய பட்ஜெட் குறித்த கேசிஆரின் விமர்சனத்திற்கும் பதிலடி தரும் வகையில் பாஜக தேசிய துணைத் தலைவர் டி.கே. அருணா பேசியுள்ளார்.

பாஜக தேசிய துணைத் தலைவர் டி.கே. அருணா
பாஜக தேசிய துணைத் தலைவர் டி.கே. அருணா
author img

By

Published : Feb 3, 2022, 9:59 AM IST

ஹைதராபாத்: 2022-23ஆம் நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கை குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் கடும் விமர்சனம் வைத்த தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவிற்கு (கேசிஆர்) டி.கே. அருணா பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 1) தாக்கல்செய்யப்பட்ட மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கை குறித்து கேசிஆர் அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில், "பாஜக தலைமையிலான அரசை அகற்றி வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும்" எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

மேலும், அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்தும் தாக்கிப் பேசினார்.

கேசிஆருக்குப் பதிலடி தரும் வகையில் டி.கே. அருணா கூறுகையில், "தெலங்கானா மாநிலத்தில் பாஜக வளர்ந்துவருவது கேசிஆர் அரசுக்கு அச்சத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் தனது செய்தியாளர் சந்திப்பின்போது நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், மத்திய அரசை அவமதிக்கும்விதமாகப் பேசியதற்கு நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும்.

இந்த கேசிஆர் அரசு ஊழலுக்குப் பெயர்போனது. பட்டியலின மக்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார், ஆனால் அதனை அவர் நிறைவேற்றவில்லை" என்றார்.

இதையும் படிங்க: Budget 2022: மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.