ETV Bharat / bharat

டெல்லி விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட 'புலிட்சர் விருது' பெற்ற காஷ்மீர் பத்திரிகையாளர்!

author img

By

Published : Jul 3, 2022, 12:16 PM IST

காஷ்மீர் புகைப்படக் கலைஞரும், புலிட்சர் விருது பெற்றவருமான சன்னா மட்டூவின் பிரான்ஸ் பயணத்தை டெல்லி விமான நிலைய அலுவலர்கள் தடை செய்தனர்.

புலிட்சர் விருது பெற்ற காஷ்மீர் பத்திரிக்கையாளரை டெல்லி விமானநிலையம் தடுத்து நிறுத்தியது

ஸ்ரீநகர்: காஷ்மீர் புகைப்படக்கலைஞரான சன்னா மட்டூ, கரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்காக புலிட்சர் விருது பெற்றவர் ஆவார். பிரான்ஸில் நடக்க இருக்கும் புகைப்படக் கண்காட்சிக்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த சன்னாவை குடிமையியல் அலுவலர்கள் பிரான்ஸ்க்கு செல்லவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சன்னா அவரது ட்விட்டரில், ' நான் இன்று பிரான்ஸில் நடக்க இருக்கும் செரண்டிபிட்டி ஆர்லஸ் மானியம் 2020இன் புத்தக வெளியீட்டு விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி விழாவில் பங்கேற்பதற்காக, '10 விருதுகளை வென்றவர்களில் ஒருவராக' டெல்லியிலிருந்து பாரிஸுக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். பிரெஞ்சு விசா இருந்த போதிலும் டெல்லி விமான நிலையத்தில் குடியுரிமை அலுவலர்களால் நான் நிறுத்தப்பட்டேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

சன்னா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு சரியான காரணம் எதுவும் இதுவரை கூறப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பத்திரிகையாளர் பயணம் செய்ய தடை விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2019ஆம் ஆண்டில் மூத்த காஷ்மீரி பத்திரிகையாளரான கவுஹர் கிலானி ஜெர்மனிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சன்னாவைப் போலவே, கவுஹருக்கும் அவர் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறித்த எந்த காரணமும் சொல்லப்படவில்லை. இந்த ஆண்டு மே 10அன்று அறிவிக்கப்பட்ட சிறப்புப்புகைப்படம் 2022 பிரிவில் மதிப்புமிக்க புலிட்சர் பரிசு விருதை சன்னா மட்டூ வென்றார்.

மறைந்த டேனிஷ் சித்திக், அட்னான் அபிடி, அமித் டேவ் உள்ளிட்ட ராய்ட்டர்ஸ் குழுவுடன் இணைந்து இந்தியாவில் கரோனா நெருக்கடி குறித்த புகைப்படங்களுக்காக சன்னா மட்டூ புலிட்சர் விருதுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புலிட்சர் விருது வென்ற காஷ்மீரைச் சேர்ந்த இளம்பெண்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.