பெங்களூரு: தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது.
இதுவரை 55க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, இங்கிலாந்து, டெல்லி, நைஜீரியா தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரும்பியவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகாவில்தான் முதன்முதலில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது.
இரண்டு டோஸ் தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படாது என்று கூறப்படும் நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்துவருவது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒன்பது பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதில் ஒருவருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான்