பெங்களூரு: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகின்றன.
மற்ற மாநிலங்களைவிட மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவு செய்யப்படுவதால், அண்டை மாநிலங்கள் எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இதனிடையே கர்நாடகா மாநிலத்தில் இன்று(ஜன.16) 34,047 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பெங்களூருவில் மட்டும் 21,071 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதிப்பு நேற்றைவிட 19.29 விகிதம் அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 5,902 பேர் குணமடைந்துள்ளனர். ஏற்கனவே கரோனா காரணமாக வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை மாநில அரசு வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - காணும் பொங்கலில் வெறிச்சோடிய காஞ்சிபுர சாலைகள்