பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த யாதுநந்தன் ஆச்சார்யா என்பவர், தனது மனைவி தன்னை தாக்கியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தனது மனைவி தன்னை கத்தியால் தாக்கியதாகவும், அதனால் ரத்தம் கொட்டுவதாகவும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், தான் ஒரு ஆண் என்பதால், இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது யாரும் உதவி செய்ய மாட்டார்கள் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் பெண் சக்தியா? என்றும், இதற்காக மனைவி மீது குடும்ப வன்முறை வழக்கு போடலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பதிவுடன் பிரதமர் அலுவலகம், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பெங்களூரு நகர காவல் ஆணையர் பிரதாப் ரெட்டி ஆகியோரையும் டேக் செய்துள்ளார். ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை குறிப்பிட்டு MenToo என்ற டேக் போட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு பதிலளித்த காவல் ஆணையர் பிரதாப் ரெட்டி, காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்கும்படியும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'இப்படி ஒரு மகன் தேவையே இல்லை' - கூலிப்படை வைத்து மகனைக்கொன்ற பெற்றோர்