ETV Bharat / bharat

Karnataka Assembly Election: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல்; பிரபலங்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு! - பெங்களூரு

கர்நாடகாவின் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வரும் தேர்தலில் பிரபலங்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Karnataka Legislative Assembly Elections Kannada actors and actresses cast their vote

author img

By

Published : May 10, 2023, 1:05 PM IST

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவை 224 தொகுதிகளைக் கொண்டது. இதற்கு இன்று (மே.10) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் தங்களது தொகுதிகளில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

'உத்தமவில்லன், சதிலீலாவதி, பஞ்ச தந்திரம்' உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகர் ரமேஷ் அரவிந்த் தனது மனைவி அர்ச்சனாவுடன் பனசங்கரி பிஎன்எம் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

சமீபத்தில் தமிழில் வெளியான 'கப்ஜா' படத்தின் நாயகன் நடிகர் உபேந்திரா கத்ரிகுப்பேயில் உள்ள பிடிஎல் வித்யாவாணி பள்ளியில் வாக்களித்தார். வாக்களிக்கும் முன் பேசிய அவர், ''கர்நாடகாவின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம், நமது எதிர்காலம், நம் குழந்தைகளின் எதிர்காலம் என்று பேசுவதை விட, அனைவரின் எதிர்காலமும் முக்கியம்'' என்றார். ''ஜனநாயகத்தின் மிக முக்கியமான நாள். அனைவரும் வந்து வாக்களியுங்கள்'' எனத் தெரிவித்திருந்தார்.

புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் ராகவேந்திரா ராஜ்குமார், அஸ்வினி புனித் ராஜ்குமார், யுவ ராஜ்குமார் ஆகியோர் சதாசிவநகர் பூர்ணபிரக்யா பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகவேந்திர ராஜ்குமார், தனது சகோதரர் புனித்தை நினைத்து உணர்ச்சிவசப்பட்டார்.

“அப்பு(புனித் ராஜ்குமார்) இல்லாமல் வாக்களிப்பது வேதனையானது. ஆரம்பத்தில் அப்பா, அம்மாவுடன் வாக்களிக்க வந்தோம். பின்னர் நானும், சிவண்ணாவும், அப்புவும் வந்தோம். ஆனால், முதல்முறையாக அப்பு இல்லாமல் வாக்களிக்க வந்துள்ளோம். எனக்கு வருத்தமாக உள்ளது. வாக்களிப்பது அனைவரின் உரிமை. நான் வாக்களித்துள்ளேன். நீங்களும் வாக்களியுங்கள்" எனத் தெரிவித்தார்.

யுவ ராஜ்குமார், "அப்பு மாமாவை இன்று காணவில்லை. ஒவ்வொரு நொடியும் அவர் நினைவுக்கு வருகிறார். நான் வாக்களித்துள்ளேன். வாக்களிப்பது நம் அனைவரின் கடமை. அனைவரும் உங்கள் பொன்னான வாக்கைப் பதிவு செய்யுங்கள்" என்றார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், ’’வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். கர்நாடகா அழகாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்’’ எனத் தெரிவித்தார்.

மேலும், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவரது மனைவியுடன் வந்து அவர்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராகுல்டிராவிட் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் கர்நாடகா முழுவதும் பதிவாகி இருந்தது.

இதையும் படிங்க: Karnataka Assembly Polls : அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.