தும்கூரு: கர்நாகடகா மாநிலத்தில் தும்கூரு மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து சிறுமியின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்து சிறுமியின் குடும்பத்தினரும் உறவினர்களும் இணைந்து சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Cyclone Biparjoy Impacts: குஜராத்தை புரட்டிப்போட்ட பிப்பர்ஜாய் புயல் - 22 பேர் காயம், 940 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு!
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, "இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஒரு விடுதியில் தங்கி இருந்த குமார் என்கிற பழங்குடி இன சிறுவனை காதலித்து வந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது, ஆனால் அவரது பெற்றோர் சிறுமியைக் கண்டுபிடித்து ஜூன் 9 அன்று வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
பழங்குடி இன சிறுவனுடனான உறவை முறித்துக் கொள்ள சிறுமி சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை பரசுராமன், சகோதரர் சிவராஜூ, மாமா துக்காராம் ஆகியோர் சிறுமியை விஷம் குடிக்கும் படி வற்புறுத்தி உள்ளனர். விஷம் குடிக்க சிறுமி மறுத்ததினால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் இணைந்து சிறுமியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்து உள்ளனர்.
இதையும் படிங்க: Nigeria boat accident: நைஜீரியா படகு விபத்து: 108 பேர் உயிரிழப்பு!
பின்னர் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடி ஊர்மக்களை நம்பச் செய்து இறுதிச் சடங்குகளையும் நடத்தி முடித்து உள்ளனர். சிறுமியின் குடும்பத்தினரின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
முதலில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார், விசாரணைக்குப் பிறகு கொலை வழக்காக மாற்றி சிறுமியை கொலை செய்த அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுமியின் தந்தை பரசுராமன், சகோதரர் சிவராஜூ, மாமா துக்காராம் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்” என துமகுரு எஸ்பி ராகுல் குமார் சஹாபுர்வாட் தெரிவித்து உள்ளார்.
பழங்குடி இன சிறுவனை காதலித்ததற்காக சிறுமியை அவரின் குடும்பத்தினரே கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.